திருகோணமலையில் இரவோடு இரவாக சிக்கிய 17 வயது சிறுவன்
திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து கைத்தொலைபேசியை திருடிய 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரொட்டவெவ கிராமத்தில் தனியாக வாழ்ந்து வந்த இளம் குடும்ப பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து குறித்த சிறுவன் பெறுமதியான கைத்தொலைபேசியை திருடியதாக மொரவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் 17 வயதுடைய சிறுவனை கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கிண்ணியா பிரதேசத்தை சேர்ந்த றஹ்மத்துல்லா நஸ்ரின் (17 வயது) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri