இந்தியக் கடற்றொழிலாளர்கள் 17 பேர் இலங்கை கடற்பரப்பில் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட 17 இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் நேற்று (29.09.2024) இடம்பெற்ற நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட போது கண்கானிப்பு பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இரண்டு இந்திய இழுவைப் படகுகளையும் அதிலிருந்து 17 இந்திய கடற்றொழிலாளர்களையும் கைது செய்தனர்.
இலுவைப் படகு
பின்னர் குறித்த கடற்றொழிலாளர்களையும் ,இலுவைப் படகுகளையும் கடற்படையினர் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து, தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் இன்று மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan
