மட்டக்களப்பில் கட்டுப்பணம் செலுத்திய 17 வேட்பாளர்கள்!
பொதுத்தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன் இரண்டு சுயேட்சைக்குழுக்கள் மற்றும் ஒரு அரசியல் கட்சி இதுவரை வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரியும் அரசாங்க அதிபருமான ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.தற்போது மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.
பேரணிக்கு தடை
இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 வேட்பாளர்கள் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளதுடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் இரண்டு சுயேட்சை குழுக்களும் வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ள.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் ஐந்து தேர்தல் மீறல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் எந்தவித வன்முறைகளும் பதிவுசெய்யப்படவில்லையெனவும் தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்திற்கு சுயேட்சைக்குழுக்களில் மூவரும் அரசியல் கட்சிகளை சேர்ந்த செயலாளர் உட்பட நான்கு பேர் மட்டுமே வருகைதரமுடியும் எனவும் மாவட்ட செயலக வளாகத்திற்கள் ஊர்வலத்திற்கு பேரணிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 2 மணி நேரம் முன்
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri