திருகோணமலையில் 16ஆவது சுனாமி நினைவு தின நிகழ்வு அனுஸ்டிப்பு
திருகோணமலை-கிண்ணியா பிரதேச செயலகத்தினால் 16ஆவது சுனாமி நினைவு தின நிகழ்வு இன்று கிண்ணியா கடற்கரை சிறுவர் பூங்கா சுனாமி நினைவு தூபிக்கு முன்பாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி, தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் கே.எம்.நிஹார் , மற்றும் கிண்ணியா அகில அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் ஏ.எம்க். ஹிதாயத்துல்லா (நளிமி) உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதுடன், பள்ளிவாயல் இமாம மஹ்மூது மௌலவி அவர்களால் விசேட துஆப் பிராத்தனையும் செய்யப்பட்டுள்ளது.
கிண்ணியா பிரதேசத்தில் சுனாமி அனர்த்தத்தினால் 377 பேர் உயிரிழந்துள்ளதுடன், 8376 பேர் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை மாவட்டத்தில் மிக அதிக அளவிலான சேதம் கிண்ணியா பிரதேசத்தில் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan