சுனாமி அனர்த்தத்தின் 16ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு
சுனாமி ஏற்பட்டு 16ஆம் ஆண்டு நினைவு இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக சுனாமி அனர்த்த நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாக 2800க்கும் மேற்பட்டவர்கள் காவுகொள்ளப்பட்ட நிலையில் இன்று அதன் 14வது ஆண்டிநினை நினைவுகூரும் வகையில் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாக அதிகமான உயிர்கள் காவுகொள்ளப்பட்ட மட்டக்களப்பு திருச்செந்தூர், புதுமுகத்துவாரம்,நாவலடி ஆகிய பகுதிகளில் சுனாமி நினைவேந்தல் நிகழ்கள் மேற்கொள்ள்ப்பட்டுள்ளன.
திருச்செந்தூர் சுனாமி ஞாபகார்த்த நினைவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி வழிபாடுகள் நடைபெற்று ஈகச்சுடர் ஏற்றப்பட்டு உறவுகள் அஞ்சலி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் க.தயாபரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரகளான பிரசன்னா இந்திரகுமார், இரா.துரைரெட்னம் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதேபோன்று புதுமுகத்துவாரம் பகுதியில் இந்து மத வழிபாட்டு முறைகளுக்கு அமைவாக சுனாமி அனர்த்தத்தினால் உயிர்நீர்த்தவர்களுக்கு நினைவு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சுனாமியில் உயிர்நீர்த்தவர்களுக்கு பூஜைகள் நடைபெற்று கடலில் அவர்களுக்கான பிராயசித்தம் செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் சுனாமி அனர்த்தம் காரணமாக 1800க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்த நிலையில் பல கோடி ரூபா சொத்துகள் இழக்க நேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.






