16ஆவது யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி இன்று ஆரம்பமானது
16ஆவது யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று ஆரம்பமானது.
இன்று (23.01.2026) காலை 10:30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் ஆரம்பமான இந்த வர்த்தக கண்காட்சி நாளை (24) மற்றும் நாளை மறுதினம் (25) ஆகிய மூன்று தினங்களில் நடைபெறவுள்ளது.
கண்காட்சி ஆரம்பம்
காலை 09:30 யாழ்ப்பாணம் ரில்கோ தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்று விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு வர்த்தக கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி, யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்தின் நிர்வாக இயக்குனர் கே.விக்னேஷ், அனுசரணையாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam