ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 16வது நினைவுத்தினம் நாளை நினைவுச்கூரப்படுகிறது
இலங்கையையும், ஆசியாவையும் தாக்கத்துக்கு உள்ளாக்கிய ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 16வது நினைவுத்தினம் நாளை நினைவு கூரப்படுகிறது.
டிசம்பர் 26ம்ஆம் திகதி முற்பகல் 9.30க்கு இந்த நினைவு நாளை முன்னிட்டு மௌனம் அனுஸ்டிக்கப்படும் என்று இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தநிலையில், கொரோனா காரணமாக ஆழிப்பேரலையின் 16வது வருட நிறைவுக்காக எவ்வித தேசிய நிகழ்வுகளும் நடத்தப்படவில்லை என்று தேசிய அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிப்பில்லி தெரிவித்துள்ளார்.
சமய நிகழ்வுகளை மாத்திரம் ஒழுங்கு செய்யுமாறு அனைத்து மாவட்ட செயலகங்களும் கேட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2004 ஆழிப்பேரலை அனர்த்தத்தில் இலங்கையில் மாத்திரம் 40ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் துரந்தர் திரைப்படம்.. என்று, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது தெரியுமா? Cineulagam