160ஆம் ஆண்டு பொலிஸ் வீரர் தினம் அனுஷ்டிப்பு
160ஆம் பொலிஸ் வீரர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமன் சிகேரா தலைமையில் பொலிஸ் வீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று (21.03.2024) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் போரின் போது காயமடைந்த அதிகாரிகள் கலந்து கொண்டதுடன் வீரர் நினைவிடத்தில் அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
1864 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட சபான் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டுக் கொல்லப்பட்டார் .
அன்று முதல் இன்று வரை 3955 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் 417 பொலிசார் உயிரிழந்துள்ளதுடன் அவர்களை நினைவும் கூறும் முகமாக வருடந்தோறும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு
பொலிஸ் வீரர்கள் தினம் இன்று வியாழக்கிழமை (21.03.2024) நாட்டின் சகல பொலிஸ் பிரிவுகளில் காலை 8 மணிக்கு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி பிரிவில் பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
விடையம் வீரர்கள் தினத்தில் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் சமந்தா சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
செய்தி - யது
மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 160 தேசிய வீரர்கள் தினத்தையிட்டு மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய வாயிலில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் இன்று வியாழக்கிழமை (21) மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
கிழக்குமாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகன ஆலோசனையின் கீழ் மாவட்ட போக்குவரத்து பொறுப்பதிகாரி சரத்த சந்திர தலைமையில் இடம்பெற்றது.
இதில் அதிதியாக மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான ட 14 பொலிஸ் பிரிவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பொலிஸ் உத்தி யோகத்தர்கள், உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் உறவுகள் கலந்து கொண்டனர்.
செய்தி : பவன்
வவுனியாவில் அனுஷ்டிப்பு
இதேவேளை வவுனியாவிலும் 160 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டடுள்ளது.
இந்நிகழ்வு வவுனியா, கண்டி வீதியில் அமைந்துள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலய வளாகத்தில் அமைந்துள்ள பொலிஸ் நினைவு தூபி முன்பாக வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் சாமந்த விஜயசேகர தலைமையில் இன்று (21.03) இடம்பெற்றது.
இதன்போது, யுத்த காலத்தில் உயிர்நீத்த பொலிஸார் நினைவு கூரப்பட்டதுடள் சர்வமதத் தலைவர்கள், உயிரிழந்த பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற பொலிஸார், வவுனியா பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா பிரிவிலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸார் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
செய்தி- திலீபன்