விசேட அதிரடிப்படையினரால் 16 வயது சிறுமி கைது! பின்னணியில் வெளியான தகவல்
ஆயுள் தண்டனை விதிக்கும் அளவுக்கு ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 16 வயது சிறுமியை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று முன் தினம் (22.05.2023) மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தியூர், புலோலி, தம்பசிட்டி பிரதேசத்தில் வசித்து வந்த குறித்த சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகள் தீவிரம்
இதன்போது சிறுமியிடமிருந்து 05 கிராம் ஹெரோயின் மற்றும் 500 மில்லிகிராம் ஹெரோயின் பொதிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து சிறுமி கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பரித்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படை முகாமினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த சிறுமி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
