யாழில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் 50 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
28 வயதுடைய சந்தேகநபரே இன்று(23.05.2023) கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஏற்கனவே ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு நான்கு மாதங்கள் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ளார்.
நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
இந்நிலையில் வழக்கு நிலுவையில் உள்ளபோது மீண்டும் ஹெரோயின் போதைப் பொருளுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவரும் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு தற்பொழுது சிறையிலிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சந்தேகநபர் விசாரணையின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
