வவுனியாவில் ஏற்பட்ட விபத்து! 16 வயது சிறுவன் பலி
வவுனியா - உளுக்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 16 வயதான சிறுவன் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்று (17) மாலை உளுக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இந்த சிறுவன் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த நபருடன் மோதி, வீதியால் பயணித்து கொண்டிருந்த பாரவூர்தியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
சிரசுமன ம. வி. நவோதயா பாடசாலையில் கல்விகற்கும் ஹன்சா டில்சான் மிகிரிங்க என்ற மாணவனே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
விபத்து தொடர்பாக உளுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan