உணவு ஒவ்வாமையினால் 16 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி - பாடசாலை நிர்வாகம் மீதான விசாரணை தீவிரம்
கந்தளாய் உள்ள பிரபல பாடசாலையொன்றில் உணவு உட்கொண்ட மாணவிகள் சிலருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, 16 மாணவிகள் அவசரமாக கந்தளாய் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று(11.06.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையில் இன்று(11) காலை வழங்கப்பட்ட காலை உணவின் போது, சுமார் 150 மாணவிகளுக்கு அன்னாசிப்பழம் வழங்கப்பட்டதாகத் தெரியவருகிறது.
உணவு ஒவ்வாமையினால் 16 மாணவர்கள் பாதிப்பு
அதனை உட்கொண்ட பின்னர், 16 மாணவிகளின் உடலில் திடீரென ஒருவகை அரிப்பு மற்றும் ஒவ்வாமை (Allergy) ஏற்பட்டுள்ளது. நிலைமையை உணர்ந்த பாடசாலை நிர்வாகம், உடனடியாகச் செயற்பட்டு அவசரப் பிரிவு ஆம்புலன்ஸ் (1990 Suwa Seriya) சேவைக்குத் தகவல் வழங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் உடனடியாக கந்தளாய் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிகளுக்கு அவசரச் சிகிச்சைப் பிரிவில் தகுந்த மருத்துவக் கண்காணிப்பும் சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் நிலைமை பாரதூரமானது அல்ல என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பாடசாலை நிர்வாகமும், சுகாதாரத் துறையினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பேரவலத்தின் பின்னணியில் வெளிவந்த கோட்டாபயவின் முக்கிய அறிவிப்பு! ஒரே நாளில் சுரேஷ் சலேவிடம் ஏற்பட்ட மாற்றம்