வவுனியாவில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
வவுனியாவில் நேற்றைய தினம் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைப்பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட ஒருவருக்குக் கடந்த சில தினத்திற்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட ஏனையவர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் முடிவுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தன.
இதன் அடிப்படையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றையதினம் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
