கிளிநொச்சியில் நேற்று 16 தொற்றாளர்கள் அடையாளம்
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றைய தினம் (14.07) 16 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி ஜெயபுரம் வீதி அபிவிருத்தி பணிகளோடு தொடர்புபட்டவர்கள், கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள புகைப்பட கலையகம் ஒன்று, வட்டக்கச்சியில் தொற்றுக்குள்ளானவருடன் தொடர்பிலிருந்தவர்கள் எனப் பரவலாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் கட்டுப்பாட்டிற்குள் இருந்த கோவிட் தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
எனவே பொது மக்கள் முழுமையான சுகாதார கட்டுப்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடந்துகொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவு கோரியுள்ளது.
இதேவேளை புதன்கிழமை 12 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமையும்
குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சற்றுமுன் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன போட்டியாளர்! முதல் வாரத்திலேயே அதிர்ச்சி Cineulagam

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
