ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டு இன்று 15 ஆண்டுகள்

Batticaloa Law and Order
By Dharu Jan 08, 2024 08:03 AM GMT
Report

இலங்கையின் பிரதான மூத்த ஊடகவியலாளராக இருந்த லசந்த விக்கிரமதுங்க கொலைசெய்யப்பட்டு இன்று 15 ஆண்டுகள் கடந்துள்ளன.

இலங்கையிலும், உலக அளவிலும் அவரது நினைவுதினம் இன்று அனுஸ்டிக்கப்படுகிறது.

தென்னிலங்கையின் ஆங்கில பத்திரிகை ஒன்றின் செய்தி ஆசிரியராக பணியாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதிபடுகொலை செய்யப்பட்டார்.

வெளிநாடு செல்ல தயாரான தாய், தந்தை மரணம்: உயர்தர பரீட்சை எழுதும் மகள்

வெளிநாடு செல்ல தயாரான தாய், தந்தை மரணம்: உயர்தர பரீட்சை எழுதும் மகள்

சர்ச்சைக்குரிய மேலும் சில சம்பவங்கள்

காலை தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது அத்திட்டிய பகுதியில் படுகொலை செய்யப்பட்டார்.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டு இன்று 15 ஆண்டுகள் | 15Th Death Anniversary Of Lasantha Wickramatunga

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை பின்தொடர்ந்து, கொலை செய்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், கொலை செய்யப்பட முன்னர், தனது காரிலிருந்த குறிப்பு புத்தகத்தில் தன்னை பின்தொடரும் மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை, லசந்த விக்ரமதுங்க எழுதியிருந்ததாக மேலதிக விசாரணைகளின் போது தெரியவந்தது.


இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்று சில வாரங்களுக்கு பின்னர் சர்ச்சைக்குரிய மேலும் சில சம்பவங்கள் பதிவாகின.

2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் கடத்தப்பட்ட இரண்டு இளைஞர்களின் தீக்கிரையாக்கப்பட்ட சடலங்கள் அநுராதபுரம் கம்மிரிஸ் கஸ்வெவ பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.

அதன் பின்னர், லசந்த விக்மரதுங்கவை கொலை செய்வதற்கு வந்ததாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளொன்று அத்திட்டிய சதுப்பு நிலமொன்றிலிருந்து மீட்கப்பட்டது.

விசாரணை இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் லசந்த விக்ரமதுங்கவின் சாரதியும் கடத்திச் செல்லப்பட்டதுடன், பின்னர் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நீர் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர்கள் சங்கம்

தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நீர் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர்கள் சங்கம்

விளக்கமறியல் உத்தரவு

கல்கிசை காவற்துறையினர், முதலில் கிடைத்த தகவல்களின் பிரகாரம் விசாரணைகளை ஆரம்பித்தாலும் அது வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவது தென்படவில்லை.

அதன் பின்னர், குற்றப்புலனாய்வு திணைக்களம் லசந்த விக்ரமதுங்கவின் கொலைச்சம்பவம் தொடர்பிலான விடயங்களை வெளிப்படுத்தி வந்த வேளையில், அந்த விசாரணை திடீரென பொலிஸ் பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு மாற்றப்பட்டது.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டு இன்று 15 ஆண்டுகள் | 15Th Death Anniversary Of Lasantha Wickramatunga

தொலைபேசி தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு ஏற்ப, இந்த கொலை தொடர்பில் 2010 ஆம் ஆண்டு ஜேசுதாசன் என்ற ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர் விளக்கமறியலில் இருக்கும் போதே 2012 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார்.

எனினும், 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி, ஆட்சி மாற்றம் இடம்பெறும் வரை லசந்த விக்மரதுங்கவின் கொலையுடன் தொடர்புபட்டதாக எந்தவொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டிருக்கவில்லை.

2015 ஆம் ஆண்டு இந்த விசாரணை மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு மாற்றப்பட்டது. அதன்படி, அவ்வேளையில் அதன் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, பொலிஸ் அத்தியட்சகர் சிசிர திசேரா மற்றும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த டி சில்வா ஆகியோர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அடக்கம் செய்யப்பட்டிருந்த லசந்த விக்ரமதுங்கவின் உடல் 2016 செப்டம்பர் மாதம் தடயவியல் விசாரணைகளுக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது.

இது துப்பாக்கிச்சூட்டினால் மேற்கொள்ளப்பட்ட கொலை அல்லவென தடயவியல் விசாரணைகளின் போது உறுதி செய்யப்பட்டது.

கொக்குவில் பொலிஸார் மீது தாக்குதல்: விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்

கொக்குவில் பொலிஸார் மீது தாக்குதல்: விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்

விசாரணைக்குழு தகவல்

2016 – 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, ஊடகவியலாளர்களான உபாலி தென்னகோன், கீத் நொயார் ஆகியோர் மீது தாக்குதல் மேற்கொண்ட குழுவிற்கும் இந்த கொலையை மேற்கொண்டவர்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக விசாரணைக்குழு வெளிப்படுத்தியது.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டு இன்று 15 ஆண்டுகள் | 15Th Death Anniversary Of Lasantha Wickramatunga

உபாலி தென்னகோன் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஒருவர் பின்னர் விக்ரமதுங்கவின் சாரதி கடத்தப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர் என பெயரிடப்பட்டிருந்தார்.

லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட காலத்தில், புலனாய்வு பிரிவின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்றதாகக் கூறப்படும் கொழும்பு திரிபோலி எனப்படும் முகாமில் பணியாற்றிய சில உறுப்பினர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டதுடன், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளையும் தொடர்புபடுத்தி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சில சந்தர்ப்பங்களில் இராணுவத்தின் சிலரும் இந்த சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டாலும் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் உரிய சந்தேகநபர்கள் இதுவரை பெயரிடப்படவில்லை.

இந்நிலையில், சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்ற காலத்தில் கல்கிசை பொலிஸ் நிலைய குற்றப்பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அவ்வேளையில் அந்த பிரதேசத்திற்கு பொறுப்பாகவிருந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். எனினும் அதிகாரிகளும் பி​ணையில் விடுவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு

இந்நிலையில், படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 15வது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டு இன்று 15 ஆண்டுகள் | 15Th Death Anniversary Of Lasantha Wickramatunga

மட்டக்களப்பில் உள்ள லசந்த விக்ரமதுங்கவின் நினைவு தூபிக்கு முன்பாக இன்று(08.01.2023) காலை 10 மணியளவில் நினைவு தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


கிழக்கு இலங்கை செய்தியாளர் சங்கம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு ஊடக அமையம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை நடத்தியிருந்தது.

மட்டக்களப்பு நகரில் உள்ள இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து கடத்தப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

செய்தி - சசிகரன்

GalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US