மாமனிதர் கிட்ணன் சிவநேசன் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் (Video)
மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களது 15ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று பல பகுதிகளில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றி
வந்த காலத்தில் 2008 ஆம் ஆண்டு இதே நாளில், மாங்குளம் குஞ்சுக்குளம் பகுதியில்
வைத்து இலங்கை ஆழ ஊடுருவும் படையணியினரின் கிளைமோர்த் தாக்குதலில் படுகொலை
செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வடமராட்சி, கரவெட்டி தெற்கு,மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் மாமனிதர் கிட்ணன் சிவனேசனின் புதல்வி தாட்சாயினி மலர்மாலை அணிவித்ததை தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் க.சுகாஸ், மற்றும் உறவுகள் ஆதரவாளர்கள், உட்பட பலரும் மலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
முல்லைத்தீவு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் சிவநேசன் கிட்டிணன் அவர்களது 15 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் முல்லைத்தீவு மல்லாவி அனிச்சயங்குளம் பகுதியில் இன்று (06)இடம்பெற்றது.
உயிர் நீத்த நாடாளுமன்ற உறுப்பினர் புதைக்கப்பட்ட மல்லாவி அனிஞ்சியன்குளம் பகுதியில் அவரது சமாதியில் இந்த நிகழ்வு நினைவுகூரப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திலகநாதன் கிந்துயன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மல்லாவி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு நினைவஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மட்டு. வவுணத்தீவு
படுகொலை செய்யப்பட்ட யாழ்.மாவட்ட முன்னாள நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கிட்ணன் சிவநேசன் 15 ம் ஆண்டு நினைவேந்தல் இன்று மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் வவுணதீவு நாவல்தோட்டம் மாரியம்மன் ஆலையத்தின் முன்னால் இடம்பெற்றது.
இதில் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.




