ஆப்கானிஸ்தானில் 153 ஊடகங்கள் தலிபான்களால் மூடல்
தலிபான்கள் பொறுப்பேற்ற பிறகு நாடு முழுவதும் உள்ள 153 ஊடகங்கள் இதுவரை மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டதையடுத்து ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றினர்.
இதையடுத்து, அந்நாட்டில் பெண் உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் உள்ளிட்டவை கேள்விக் குறியாகும் அபாயம் இருப்பதாக உலக நாடுகள் அச்சம் தெரிவித்தன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் டோலோ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ஆப்கானிஸ்தானின் 20 மாகாணங்களில் உள்ள பத்திரிகை மற்றும் காட்சி ஊடகங்கள் என 153 ஊடக நிறுவனங்கள் தலிபான்களின் கட்டுப்பாடுகளால் மூடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் கூறுகையில், “அமைப்பை ஆதரிக்கும் ஊடகங்கள் எங்கள் மீது கவனம் செலுத்தவில்லையெனில் விரைவில் நாட்டில் உள்ள பிற ஊடகங்களையும் மூடும் நிலை உருவாகும்.”
என தெரிவித்தார். இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
மூத்த குடிமக்களுக்கு சிறந்த ஆஃபர் - ரூ.1,000 முதலீடு செய்தால், மாதம் ரூ.20,500 பெறலாம் News Lankasri
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan