காத்தான்குடியில் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம்! 22 வயது இளைஞனுக்கு நேர்ந்த கதி
காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 22 வயதுடைய இளைஞனை எதிர்வரும் 18 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
காத்தான்குடி பிரதேசத்தில் 15 வயது சிறுமியை காதலிப்பதாக தெரிவித்து குறித்த இளைஞர் அப்பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் வைத்து சிறுமியை துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த இளைஞனை கைது செய்து செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதிமன்ற
நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவரை எதிர்வரும் 18 ம்
திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri