வவுனியாவில் டிப்பர் மோதி விபத்து - சிறுவன் மரணம்
வவுனியா - செட்டிகுளம் பகுதியில் டிப்பர் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் 15 வயது சிறுவன் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, செட்டிகுளம், முதலியார்குளம் பகுதியில் இன்று (18.10) மாலை இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
மதவாச்சி - மன்னார் பிராதான வீதியில் பயணித்த டிப்பர் வாகனம் செட்டிகுளம், முதலியார்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 15 வயது சிறுவன் மரணமடைந்துள்ளார்.
குறித்த விபத்தில் செட்டிகுளம், முகத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஆ.சயந்தன் (வயது 15) என்ற சிறுவனே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
விபத்து தொடர்பில் டிப்பர் சாரதி செட்டிகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri