யாழில் 15 வயது மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு! விசாரணையில் வெளியான தகவல்
யாழ்ப்பாணத்தில் ஊசிமூலம் உயிர்கொல்லி ஹெரோய்ன் போதைப்பொருள் பயன்படுத்திய 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் மூளை மற்றும் இதயத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
13 பேர் பலி
இவருடன் சேர்த்து இந்த ஆண்டு 13 பேர் ஹெரோய்ன் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியொன்றில் வசிக்கும் 15 வயது மாணவன் கடும் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்தவாரம் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்ட போதும் நேற்று அந்த மாணவன் உயிரிழந்துள்ளார்.
ஹெரோய்ன் பாவனை
மாணவனின் சடலத்தை நீதிவான் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
ஹெரோய்னை ஊசிமூலம் இந்த மாணவன் பயன்படுத்தி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri