உக்ரைன் வீரர்கள் அதிரடி! - 15 ஆயிரம் ரஷ்ய படையினர் பலி
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இதுவரையில் 15 ஆயிரம் ரஷ்ய படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் என நேட்டோ அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
உக்ரைன் அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இத்தகவலை நேட்டோ இராணுவ அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா 28வது நாளாக தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றது. உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்யா உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது.
ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் இராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது. உக்ரைன் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலும் சேதம் அதிக அளவில் உள்ளது.
இதுவரையில் ரஷ்யா படையினர் 7000 முதல் 15 ஆயிரம் வரையிலானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என நேட்டோ அமைப்பு மதிப்பிட்டுள்ளது. உக்ரைன் அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இத்தகவலை நேட்டோ இராணுவ அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.
இதேவேளை, அப்பட்டமான பொய்களுடன் ரஷ்யாவுக்கு அரசியல் ஆதரவை சீனா வழங்குவதாக நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் குற்றம் சுமத்தியுள்ளார்.
அணு ஆயுதம் மற்றும் இரசாயன ஆயுத அச்சுறுத்தல்களுக்கு எதிராக உக்ரைனுக்கு கூடுதல் ஆதரவை வழங்குவதற்கு நேட்டோ நட்பு நாடுகள் ஒப்புக்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
