மியன்மாரில் 15 இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு
மியான்மரில் 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் ஆலோசனையின் அடிப்படையில், கடற்றொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு கோரி தூதரகம் பல கோரிக்கைகளை முன்வைத்ததாக மியன்மாருக்கான இலங்கை தூதர் ஜனக பண்டார தெரிவித்தார்.
மியான்மர் பிரதமரையும் சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை விடுத்த நிலையில் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாகவும் தூதுவர் பண்டார தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை
குறித்த கடற்றொழிலாளர்கள் 2023 டிசம்பரில் நாட்டின் கடல் எல்லையை சட்டவிரோதமாக கடந்ததற்காக மியன்மார் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி இன்னும் சில நாட்களில் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப இலங்கை தூதரகம் நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மியன்மாரின் பாரம்பரிய புத்தாண்டை முன்னிட்டு அந்நாட்டு அரசாங்கம் 3,000 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |