உணவுப் பொருட்கள் விலை உயரும் அபாயம்
நாட்டில் அண்மையில் அறிவிக்கப்பட்ட 15% மின்சார கட்டண உயர்வு, நாடளாவிய அளவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாகிவிடும் என தேசிய நுகர்வோர் முன்னணி (NCF) தலைவர் அசேல சம்பத் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மின்சாரம் பற்றிய அதிக செலவுகள், உணவுத் தயாரிப்பு மற்றும் விநியோகச் செலவுகளை நேரடியாக பாதிக்கும். இதன் விளைவாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“வாழ்க்கைச் செலவு ஏற்கனவே உயர்ந்துள்ள சூழலில், பல குடும்பங்கள் போஷக்கூறுகளான உணவுகளை கொள்வனவு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக, அண்மையில் அதிகரித்துவரும் தொற்றா நோயாளர்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம், இவ்வளவான விலை உயர்வுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க விலைக் கட்டுப்பாடுகள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதா என்பதைத் தெரிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
“அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த வேண்டும்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
“இந்த ஆண்டு ஜனவரியில், மாகாண சபை தேர்தலை முன்னிட்டு, அரசாங்கம் மின்சார கட்டணத்தை 20 வீத்தினால் குறைத்தது.
இது நிதியளவில் எந்த அடிப்படையும் இல்லாமல், அரசியல் லாபத்துக்காக மட்டுமே செய்யப்பட்டது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், இலங்கை மின்சார சபை (CEB) மேலும் நட்டமடைய நேரிட்டதாக அவர் குற்றம்சாட்டினார். இப்போது மின்சாரசபைக்கு ஏற்பட்ட நிதி இழப்புக்கு யார் பொறுப்பு ஏற்கப்போகிறார்கள் என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
“பொதுமக்களுக்கு இந்த விலை உயர்வு மூலமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அரசாங்கம் விளக்கம் தர வேண்டும்,” என அவர் வலியுறுத்தியுள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
