இனியபாரதியின் அலுவலகத்திற்கு சென்ற தாயை துரத்திய கருணா.. யாரும் அறியாத பல இரகசியங்கள்!
மட்டக்களப்பில் திருமால் திருச்செல்வம் என்ற 23 வயதுடைய இளைஞன், 2008.09.25 அன்று காலை 5 மணியளவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது, இனியபாரதியின் சகாக்களால் கடத்தப்பட்டார்.
இதன்போது, அதனை தடுக்க முயன்ற குறித்த இளைஞனின் தாயார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
அதேவேளை, துஷாந்தன் எனப்படும் மற்றொரு இளைஞனும் குறித்த கும்பலால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இழுத்து வரப்பட்டதாக திருச்செல்வத்தின் தாயார் தெரிவிக்கின்றார்.
கடத்தப்பட்ட இளைஞன், பச்சை நிற முச்சக்கர வண்டியில் ஏற்றப்பட்டு பின்னர் இனியபாரதியின் வதைமுகாமாக இருந்த அவரது அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதனையடுத்து, கடத்தல்களுடன் கருணாவுக்கு தொடர்பு இருப்பதாக தெரிந்ததையடுத்து, குறித்த தாய் கருணா குழுவினரையும் காண சென்றுள்ளார்.
எனினும், அங்கும் அவர் துரத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தன் மகன் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இல்லை என்பதை ஏற்றுக்கொள்வதற்காக அவரது எஞ்சியுள்ள எலும்புக்கூடுகளையாவது என்னிடம் ஒப்படையுங்கள் என்பதே அந்த தாயின் கோரிக்கையாக உள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan