வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவில் 15 பவுண் நகை திருட்டு (Video)
வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களின் நகைகள் திருடப்பட்டுள்ளதாக என பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா
வரலாற்று சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழாவில் நேற்று தேர்த்திருவிழா இடம்பெற்றது.
தேர்த்திருவிழாவில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் பங்கேற்றுள்ளனர்.
15 பவுண் தங்க நகைகள் திருட்டு
தேர்த்திருவிழாவில் நேற்றிரவு கிடைக்கப்பெற்ற 7 முறைப்பாடுகளின் அடிப்படையில் 15 பவுண் தங்கநகைகள் திருடப்பட்டுள்ளதாக என பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தேர்த்திருவிழாவைவிட இன்றைய சமுத்திரத் தீர்த்த திருவிழாவில் அதிகளவு அடியவர்கள் பங்கேற்பர் என்ற அடிப்படையில் தமது நகைகள் மற்றும் பணம் தொடர்பில் முன் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 8 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam