அநுர தரப்பில் இருந்தும் கட்சி தாவலா!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்துள்ள நிலையில் உட்கட்சி விவகாரத்தில் சில சிக்கல்கள் தோன்றியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறது.
குறிப்பாக எதிர் தரப்புகள் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொது தேர்தலில் அவர்கள் பெற்ற வாக்குகளில் சரிவை சந்திக்கவுள்ளனர் எனவும் சூளுரைப்பதை அவதானிக்க முடிகிறது.
இந்நிலையில் இன்றைய தென்னிலங்கை பத்திரிகை ஒன்று, அரசியல் விவகாரம் தொடர்பிலான செய்தி ஒன்றில் அநுர அரசில் இருந்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர் தரப்புக்கு செல்லவுள்ளதான செய்தியை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி
முன்னதாக இது தொடர்பில் கடந்த 07.02.2025 அன்று வெளியான ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியிலும் ஆராயப்பட்டிருந்தது.
இன்னிலையில் தற்போது மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் பின்வருமாறு குறித்த செய்தியை வெளியிட்டுள்ளன,
“தென் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. ஒருவருடன் தற்போதைய அரசாங்க எம்.பி.க்கள் குழு மிக நெருக்கமான உறவை பேணுகிறது.
இரு தரப்பும் அவர்களுக்கு இடையில் தொடர்ந்து கடந்த கால நிகழ்வுகளைப் பற்றி நகைச்சுவையாக பேசுவது வழமை.
நெருங்கிய நண்பர்கள்
தங்கள் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்ளும் நெருங்கிய நண்பர்கள் அவர்கள்.
இதில் அரசாங்க தரப்பினர், ஐக்கிய மக்கள் சக்தி தரப்பிடம் அடிக்கடி முன்வைக்கும் முறைப்பாடு ஒன்று உள்ளது.
அதாவது ‘‘எங்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை. எங்களுக்கு ஒரு கொடுப்பனவு கூட கிடைப்பதில்லை. இதில் எப்படி வாழ முடியும்?
நாடாளுமன்றம் முடிந்ததும், எங்களை ஒரு பேருந்தில் ஏற்றி எம்.பி.க்களின் குடியிருப்புகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
பதினைந்து அரசாங்க எம்.பி.க்கள்
மறுநாள் காலை, பேருந்து மீண்டும் வந்து எங்களை நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் செல்கிறது. "அதைத் தவிர எங்களுக்கு வேறு வாழ்க்கை இல்லை," என்று கூறப்பட்டுள்ளது.
ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களின் அடிமைகளாக தாங்கள் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இதன் காரணமாக, எதிர்காலத்தில் சுமார் பத்து முதல் பதினைந்து அரசாங்க எம்.பி.க்கள் பதவி விலக வாய்ப்புள்ளது என்று அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தி தரப்பிடம் கூறியுள்ளனர்’’ என இந்த செய்தி வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)