கிளிநொச்சியில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 15 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
கிளிநொச்சி- தர்மபுரம் ஏ 35 பிரதான வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது 15 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை, மது போதையில் அதிக வேகத்துடன் மோட்டார் சைக்கிளை செலுத்தியமை போன்ற குற்றங்கள் கண்டறியப்பட்டன.
இதனையடுத்து, பதினைந்து மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிணை
இதேவேளை, கல்லாறு பகுதியில் இருந்து அனுமதிப்பத்திரம் எதுவும் இன்றி சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்றும், கனரக வாகனம் ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் தடையப் பொருட்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி எம்.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
4 வயது சிறுவனின் உடல் பாகங்களை அறுத்தெடுத்த கொடூரன்: AI செயலி மூலம் தீட்டிய சதி திட்டம் News Lankasri