பூஸா சிறைச்சாலைக்குள் இருந்து மேலும் 15 தொலைபேசிகள் மீட்பு!
பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பூஸா சிறைச்சாலையிலிருந்து மேலும் 15 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.
பூஸா சிறைச்சாலையானது அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையாகக் கருதப்படுகின்றது.
சிறைச்சாலைக்குள் தேடுதல்
எனினும், அங்கு தொலைபேசிகள் பயன்படுத்தப்படுகின்றன என்று புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதனையடுத்து கடந்த சில நாட்களாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் சிறைச்சாலைக்குள் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகின்றது.
இதற்கமைய பாதாளக் குழு உறுப்பினர்களான பொடி லெசி , தெமட்டகொட சமிந்த, மிதிகம ருவான் உள்ளிட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை அறைகளில் இருந்தும் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.
பூஸா சிறைச்சாலை
தரையைத் நோண்டியும் ஏனைய சில பகுதிகளிலும் இவை மிகவும் சூட்சுமமான முறையில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு சிறைச்சாலை அறைகள் பல சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. டேட்டா கேபல், பவர் பேங், சிம் அட்டைகள் , சிக்னல் பூஸ்டர் உட்பட மேலும் சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பூஸா சிறைச்சாலையில் உள்ள சில அதிகாரிகள், குற்றவாளிகளுக்கு உதவுகின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.