நேருக்கு நேர் மோதிய இரு தொடருந்துகள்: பங்களாதேஷில் பாரிய விபத்து
பங்களாதேஷில் இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர் எனவும் அந்நாட்டு வைத்தியசாலை வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அச்சம் வெளியிட்டுள்ளது.
பாரிய விபத்து
பங்களாதேஷின் டாக்கா மாகாணத்தின் கிஷோர்கஞ்ச் மாவடத்தில் இருந்து டாக்கா நோக்கி சென்று கொண்டிருந்த இகரொசிந்தூர் அதிவேக தொடருந்தானது, பயணத்தை ஆரம்பித்த சில நிமிடங்களில் மாற்று தண்டவாள பாதைக்காக மாற்றப்பட்டு இருந்துள்ளது.
இதன்போது குறித்த தொடருந்து தண்டவாளம் மாறிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், திடீரென வேகமாக வந்த மற்றொரு தொடருந்து அதன் மீது மோதியதில் இந்த பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் அதிவேக தொடருந்தின் பெட்டிகள் தடம்புரண்டன என்றும், இதன் காரணமாக அந்த தொடருந்தில் பயணம் செய்தவர்களில் இதுவரை 15 பேர் உயிரிழந்தனர் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தொடருந்து விபத்துக்குள்ளான பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது எனவும், இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri