திடீரென தலைகீழாக கவிழ்ந்த பேருந்து! பயணிகளின் நிலை குறித்து வெளியான தகவல்
கண்டி நோக்கி பயணித்த பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்களில் 8 பேர் சிகிச்சைக்காக வத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து
குடுகல பகுதியில் இருந்து வத்தேகம வழியாக கண்டி நோக்கி பயணித்த, வத்தேகம டிப்போவைச் சேர்ந்த பேருந்து ஒன்றே இவ்வாறு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து அரலிய உயன பகுதியில் இன்று (03.07.2025) இடம்பெற்றுள்ளது.
பேருந்து வீதியை விட்டு விலகி ஒரு வீட்டின் அருகே கவிழ்ந்தது விபத்துக்குள்ளானதில், குறித்த பேருந்தில் பயணித்த சுமார் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்துக்கான காரணம்
இதேவேளை, இந்த விபத்தில் குறித்த வீடு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து சென்று கொண்டிருந்தபோது, சாரதியின் இருக்கைக்கு அருகிலுள்ள கதவு திடீரெனத் திறந்ததாகவும், சாரதி அதைப் பிடிக்கச் சென்றபோது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
விபத்து நடந்த போது பேருந்தில் சுமார் 25 பயணிகள் இருந்ததாகவும், காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
