யாழில் சுகாதார சீர்கேட்டில் இயங்கிய உணவுகங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை
யாழ்ப்பாணம் - சங்கானை பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 14 உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுளதோடு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த 14 உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களிற்கும் எதிரான மல்லாகம் நீதிமன்றில் இன்று (21.03.2024) வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
174,000 ரூபா அபராதம்
சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த சில நாட்களாக உணவகங்கள் மற்றும் பலசரக்கு விற்பனை நிலையங்களில் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த சில நாட்களாக சங்கானை பிரிவு பொது சுகாதார பரிசோதகர், வட்டுக்கோட்டை பிரிவு பொது சுகாதார பரிசோதகர், அராலி பிரிவு பொது சுகாதார பரிசோதகர், சுழிபுரம் பிரிவு பொது சுகாதார பரிசோதகர்கள், தங்கள் பிரிவுகளில் திடீர் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது திகதி காலாவதியான உணவு பொருட்கள், பழுதடைந்த உணவு பொருட்கள், உரிய சுகாதார நடை முறைகளை பின்பற்றாத உணவகங்கள் என 14 உணவகங்கள் மற்றும் பலசரக்கு விற்பனை நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேற்படி, 14 உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களிற்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்களால் மல்லாகம் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதுடன் 174,000 ரூபா அபராதம் விதித்து கடுமையான எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam