லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு 14 ஆண்டுகள்-இலங்கையில் கிடைக்காத நீதி (video)
சன்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
கனத்தை மயானத்தில் நினைவு தினம் அனுஷ்டிப்பு
அவரது நினைவு தினமான இன்று கொழும்பு பொரள்ளை கனத்தை மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறைக்கு அருகில் இன்று காலை எளிமையான நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் லசந்த விக்ரமதுங்கவின் சகோதரர் லால் விக்ரமதுங்க உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
இலங்கையில் புலனாய்வு செய்திகளை வெளியிடும் முக்கியமான பத்திரிகையான சன்டே லீடர் பத்திரிகை ஆதாரங்களுடன் வெளியிட்ட செய்திகள் அரசியல் துறையில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தின.
பத்திரிகை மூலம் லசந்த விக்ரமதுங்க விமர்சித்த அரசியல்வாதிகளின் எதிர்ப்புக்கு அவர் உள்ளனார்.
2009 ஜனவரி 8 ஆம் திகதி நடந்த கொலை
கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆமு் திகதி தனது வீட்டில் இருந்து பத்திரிகை அலுவலகத்திற்கு காரில் சென்றுக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த கறுப்பு ஆடையை அணிந்து வந்த இரண்டு நபர்கள், லசந்த விக்ரமதுங்கவை கொடூரமான தாக்கி, துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் படுகாயமடைந்த அவர் களுபோவில வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
அவரது கொலை சம்பந்தமாக நடத்தப்பட்ட விசாரணைகளில் கொலையுடன் தொடர்பு நபர்கள் தொடர்பில் பல சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகின.
அவர் கொல்லப்பட்டு குறுகிய காலத்தில் அவரது கொலையுடன் கொழும்பு திரிபோலி இராணுவ முகாமுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.
அத்துடன் கொலையுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்து விசாரணைகளில் தெரியவந்தது.
கொலை தொடர்பான விசாரணைகள் மிகவும் மந்தகதியில் நடந்தன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் முதலாவது பதவி காலம் உட்பட நான்கு அரசாங்கங்கள் இதுவரை பதவி வந்துள்ளன. எனினும் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்த கொலையாளிகளுக்கு எதிராக சட்டம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
[]
எப்படியான அழுத்தங்களுடன் கூடிய செய்தியளிப்பில் ஈடுபட்டிருந்தாலும் லசந்த விக்ரமதுங்கவிற்காக அனைத்து ஊடகங்கள், அரசியல்வாதிகள் குரல் கொடுத்தாலும் விசாரணைகள் நீதியை நிலை நாட்டும் முடிவை நோக்கி நகரவில்லை.
இது இலங்கையின் சட்டத்துறை மற்றும் நீதியின் சுபாவத்தை உலகத்திற்கு காட்டிய சந்தர்ப்பமாக மாறியுள்ளது.
இதேபோல தர்மரத்தினம் சிவராம், மயில்வாகனம் நிமலராஜன், சுப்ரமணியம் சுகிர்தராஜன், ஐயாத்துரை நடேசன், செல்வராஜா ரஜீவர்மன், பிரகீத் ஹெக்னேலிகொட உட்பட பல ஊடகவியலாளர்களின் கொலை தொடர்பான விசாரணைகளில் குற்றவாளிகள் எவருக்கும் நீதித்துறையின் ஊடாக தண்டனை வழங்கப்படவில்லை.
மேலும், உயிரிழந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் நினைவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் , மட்டு ஊடக அமையம் ஆகியவற்றின் தலைவர் வா.கிருஷ்ணகுமார் தலைமையில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைந்துள்ள மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் இந்நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
உயிரிழந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள்,பல்சமய ஒன்றிய பிரதிநிதிகள், மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமைய உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.






உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
