வயிற்று வலி என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு அதிர்ச்சி
ஹப்புத்தளையில் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
ஹப்புத்தளை கெல்பன் தோட்டம் பகுதியை சேர்ந்த சிறுமி நேற்று முன்தினம் இரவு வயிற்று வலி காரணமாக தியத்தலாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுமியை பரிசோதித்த பிறகு, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுமியிடம் வாக்குமூலம்
மருத்துவமனை பொலிஸார் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் 52 வயதான நபரொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

ஹப்புத்தளை பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
சம்பவம் தொடர்பாக ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri