திருகோணமலையில் மின்சாரம் தாக்கி 14 வயது சிறுவன் உயிரிழப்பு (Photos)
திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் பிரிவுக்கு ஆறாம் கட்டை ஐயப்பன் கோயிலில் பூசை உதவியாளராக கடமை ஆற்றி வந்த 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி இன்று (08) உயிரிழந்துள்ளார்.
எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மஹர ஜோதி மண்டல பெருவிழா இடம் பெற இருக்கின்ற நிலையில் குறித்த கோயிலில் நிறம் பூசும் வேலைகள் இடம்பெற்று வருகின்றது.
இந் நிலையில், பூசை உதவியாளரான குறித்த சிறுவன் கோயிலுக்கு மேல் மாடிக்குச் சென்று மின் குமிழ்களை பொருத்திக் கொண்டிருக்கின்ற வேளையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
மரண விசாரணை
இவ்வாறு உயிரிழந்தவர் டயகம பகுதியைச் சேர்ந்த திருச்செல்வன் லுகநாத் (14 வயது) என தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த சிறுவன் கோயிலுக்கு மேலே இருந்ததால் பூசாரியின் மனைவி இரண்டு மூன்று தடவைகள் அழைத்த போது வருகின்றேன் வருகின்றேன் என கூறி உள்ளார்.
பின்னர் பத்து நிமிடங்களாகியும் வராததால் வெளியே வந்து கோயில் மேல் பகுதியை பார்த்தபோது தலைகீழாக கையில் குறடை வைத்துக் கொண்டு வீழ்ந்து கிடந்ததாகவும், இதனை அடுத்து வேலை செய்து கொண்டிருந்தவர்களை கூப்பிட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் பூசாரியின் மனைவியார் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த உதவி பூசாரியின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பிலான விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 15 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri