ஐரோப்பா உட்பட பல நாடுகளிலிருந்து இலங்கை வந்த மர்ம பொதிகள்
ஐரோப்பா உட்பட பல நாடுகளிலிருந்து வந்த குறிப்பிட்ட முகவரிகள் மற்றும் உரிமையாளர்கள் இல்லாத 14 தபால் பொதிகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினால் சோதனை செய்யப்பட்டுள்ளது.
அவற்றில் பல்வேறு வகையான போதைப்பொருட்களை கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவற்றில் உலகின் மிக விலையுயர்ந்த போதைப்பொருட்களில் ஒன்றாகக் கருதப்படும் மேன்டி என்ற போதைப்பொருள் சுமார் 700 கிராம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போதை மாத்திரைகள்
15 கிராம் ஐஸ், 700 கிராம் குஷ், 200 கிராம் கொக்கைன் மற்றும் 196 போதை மாத்திரைகள் இவற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் விமான தபால் மூலம் இந்நாட்டிற்கு வருவதாகவும், தபால் துறை, இலங்கை சுங்கம் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஆகியவை அவை குறித்து தொடர்ந்தும் விழிப்புடன் இருப்பதாகவும் திணைக்களங்கள் தெரிவித்துள்ளன.
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam