தெற்கு இத்தாலி கடலில் இருந்து மேலும் 14 சடலங்கள் மீட்பு
தெற்கு இத்தாலிய(Italy) கடற்பகுதியில் கடந்த வாரம் துருக்கியில் இருந்து வந்த மோட்டார் படகு திடீரென தீப்பற்றியதால் அச்சமடைந்து கடலில் ஏராளமானவர்கள் குதித்துள்ளனர்.
இதன்போது 20 பேர் உயிரிழந்ததோடு ஏராளமானவர்கள் காணமல்போய் இருந்தனர்.
இந்நிலையில் காணமல் போனவர்களில் 14 பேரின் சடலங்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
3 கப்பல்கள்
இதனை தொடர்ந்து பலி எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ள தோடு இன்னும் பத்துக்கும் மேற்பட்டோரை காணவில்லை என கூறப்படுகிறது.
மேலும், அவர்களை தேடும் பணியில் கடலோர காவல்படையின் 3 கப்பல்கள் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீ விபத்துக்குள்ளான படகில் ஈரான், சிரியா மற்றும் ஈராக்கை சேர்ந்த சுமார் 75 பேர் பயணம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |