மனித உரிமைகள் பேரவையின் ஆணைகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள இலங்கை
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின், ஒருதலைபட்சமான மனித உரிமை ஆணைகளுக்கு இலங்கை தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் (Geneva) உள்ள இலங்கை நிரந்தர தூதரகத்தின் அமைச்சு ஆலோசகர் திலினி லெனகல, வற்புறுத்தலுக்கு எதிரான ஒத்துழைப்பை வலியுறுத்தும் எதிர்ப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உறுப்பு நாடுகளுடன் ஆக்கபூர்வமான உரையாடல்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு பேரவையை லெனகல, வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பேரவை
மேலும், மாற்றத்தை வளர்ப்பதற்கு உள்நாட்டு முயற்சிகள் மூலம் ஏற்பட்ட முன்னேற்றத்தை ஒப்புக்கொள்வது முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பேரவையால், மனித உரிமைகள் ஆணைகளை குறித்த நடைமுறைக்கு நேரடியாக அவரின் அறிக்கை மூலம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் அனுமதியின்றி நடைமுறைப்படுத்தப்படும் இத்தகைய ஆணைகள், நாட்டை பிளவுபடுத்தும் மற்றும் பலனளிக்காதவை என்று லெனகல குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தீர்மானம் 60/251 மற்றும் ஐ.பி. பொதியில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டும் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு கூட்டு அணுகுமுறைக்கு இலங்கை அழைப்பு விடுப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஒருதலைப்பட்சமான ஆணைகள்
அத்துடன், மனித உரிமைகள் பேரவையின் பணியானது இறையாண்மை சமத்துவம், பிரதேச ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளித்தல் மற்றும் தலையீடு செய்யாமை போன்ற கோட்பாடுகளால் வழிநடத்தப்பட வேண்டும் என்ற இலங்கையின் நம்பிக்கையை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே, ஒருதலைப்பட்சமான ஆணைகளைப் பின்பற்றுவது இந்தக் கோட்பாடுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.
அத்துடன் மனித உரிமைகள் பிரச்சினைகளில் உண்மையான முன்னேற்றத்தைத் தடுக்கிறது என்றும், ஜெனீவாவில் உள்ள இலங்கை நிரந்தர தூதரகத்தின் ஆலோசகர் திலினி லென லெனகல தமது அறிக்கையில் வலியுறுத்தினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |