13ஆம் திருத்தத்திற்கு முன்னர் ஜனாதிபதி செய்ய வேண்டிய வேலை! தேரர் கூறும் அறிவுரை
13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் பொதுமக்களின் ஆணையை ஜனாதிபதி பெற வேண்டும் என பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டும். 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் பொதுமக்களின் ஆணையை பெறவேண்டும்.
ஜனாதிபதிக்கு ஆணையில்லை

ஜனாதிபதி தேர்தலை அறிவித்துவிட்டு 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரத்தை மக்களிடம் கோருங்கள்.
மக்கள் அதற்கான அதிகாரத்தை வழங்க தயார் என்றால் மாத்திரமே அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உரிமை கிடைக்கும். ஜனாதிபதிக்கு தற்போது அதற்கான ஆணையில்லை.
தற்போதைய அரசாங்கத்திற்கு இதற்கான ஆணையில்லை, அவர்கள் தேர்தல் மூலம் இந்த பதவிகளை பெறவில்லை முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவான சிலர் மூலமே அவர்கள் இந்த ஆதரவை பெற்றனர் என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam