இது பொருத்தமான தருணம் அல்ல! ஜனாதிபதியை நாடும் பொதுஜன பெரமுன
13ஆவது திருத்தத்தை விஸ்தரிக்க இது பொருத்தமான தருணமில்லை என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
கட்சியின் நிலைப்பாட்டை ஜனாதிபதியிடம் தெரியப்படுத்துவோம். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக உள்ள பொதுஜனபெரமுனவின் பிரிவும் இந்த நிலைப்பாட்டை ஆதரித்துள்ளது.
அரசாங்கம் அழுத்தத்திற்கு உள்ளாகலாம்
பலவீனமான பொருளாதார நிலை காரணமாக அரசாங்கமே நெருக்கடியான நிலையில் உள்ள இந்த தருணத்தில் அரசாங்கம் 13ஆவது திருத்தத்தை விஸ்தரிப்பதற்கு இணங்கினால் அரசாங்கம் தேவையற்ற அழுத்தத்திற்குள்ளாகலாம்.
நாடு வலுவான பொருளாதார நிலையில் உள்ளவேளை 13ஆவது திருத்தத்தை விஸ்தரிப்பது குறித்து சிந்திக்கலாம் என்ற யோசனையை முன்வைக்கவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




