13ஆவது திருத்தச்சட்டம் குறித்து மலையக அரசியல் தலைவர்கள் கூறிய தகவல்
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை விரைவில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே. இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அட்டனில் அமைந்துள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் இன்று (3001.2023) நடைபெற்ற
ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டும்
"அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டமென்பது நாட்டின் அரசமைப்பில் இருந்தாலும், அது இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. பொலிஸ், காணி அதிகாரங்கள் தொடர்பில் போலியான விம்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவது வடக்கு, கிழக்குக்கு மட்டும் அல்ல, 9 மாகாணங்களும் அதன்மூலம் பயன்கிட்டும்.
எனவே, தமிழர்களுக்கு எதிரான சில சக்திகளே 13 தொடர்பில் போலி பிரசாரத்தை முன்னெடுத்துவருகின்றன. இவற்றை அரசு கருத்திற்கொள்ளாது, சர்வதேச உடன்படிக்கையான 13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டும்.
மலையகத்துக்கு அடையாளங்கள் அவசியம்
லண்டன், மலேசியா போன்ற நாடுகளில் உள்ளாட்சிசபைகளுக்கு உள்ள அதிகாரங்கள்கூட, எமது நாட்டில் உள்ள மாகாணசபைகளுக்கு இல்லை. உள்ளாட்சிமன்ற தேர்தல் நடைபெறுமா என்பது குறித்து எதிர்வரும் 10ஆம் திகதியே உறுதியான முடிவுக்கு வரமுடியும்.
காணி உரிமை மற்றும் பல்கலைக்கழகம் உள்ளிட்ட மலையக அடையாளங்கள் அவசியம். அவற்றை
பெற்றுக்கொடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மலையக - 200
நிகழ்வில் இதனை வலியுறுத்துவோம்.
அத்துடன், மலையகம் 200 நிகழ்வுக்கு தமது நாட்டின் சார்பில் சிறப்பு பிரதிநிதி ஒருவரை இந்தியா அனுப்பும்" எனத் தெரிவித்துள்ளார்.
13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்: திகாம்பரம்
13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு
நாம் ஆதரவு. அதேபோல பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள
அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். நான்
அமைச்சரவையில் இருந்தபோதும் இதனை தொடர்ச்சியாக வலியுறுத்தினேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், உள்ளுராட்சி சபைத் தேர்தலில் எமக்கான வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. களநிலைவரம் மாறியுள்ளது. தேர்தலில் மாற்றுக் கட்சிகளை விமர்சிக்காமல், வேலைத்திட்டங்களை முன்வைத்து - தெளிவுபடுத்தி பிரசாரத்தை முன்னெடுக்குமாறு கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.
அதேவேளை, 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு
நாம் ஆதரவு. அதேபோல பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள
அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். நான்
அமைச்சரவையில் இருந்தபோதும் இதனை தொடர்ச்சியாக வலியுறுத்தினேன் எனத் தெரிவித்துள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
