13ஆம் திருத்த சட்டமே எமது நிலைப்பாடு: தமிழ் தரப்பிடம் இந்திய தூதர் விளக்கம்
13ஆவது அரசியலமைப்பு திருத்தம் இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் கிடையாது என்றும், இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து விடயங்கள் தொடர்பிலும் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம் என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (01.08.2023) முற்பகல் இந்திய உயர்ஸ்தானிகரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின்போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் குறித்தே இந்த சந்திப்பில் பிரதானமாக கலத்துரையாடப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான ஆவணங்களை இந்திய உயர்ஸ்தானிகர் கூட்டமைப்பினரிடம் கையளித்துள்ளார்.
13ஆவது திருத்த சட்டம்
இதேவேளை 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் ஊடகவியலாளர் சந்திப்பில் இந்திய வெளிவிவகார செயலாளர் தெரிவித்திருந்தமை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை காணி அபகரிப்பு. சிங்கள் குடியேற்றங்கள் உள்ளிட்ட வடக்கு, கிழக்கில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இந்தியாவின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பினர் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கட்டிக் காட்டியுள்ளனர்.
இதன்படி 13ஆவது திருந்தம் உள்ளிட்ட விடயங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என்று இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்ததாக கூட்டமைப்பு பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி-அரசியல் தீர்வுகள்
மேலும், இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் உள்ள பொருளாதார அபிவிருத்தி மற்றும் அரசியல் தீர்வுகள் உள்ளிட்ட அனைத்து விடயங்கள் தொடர்பிலும் இந்தியா தொடர்ந்தும் அவதானத்துடன் உள்ளது என்பதுடன், இந்த விடயத்தில் தொடர்ந்தும் இலங்கை அர சாங்கத்தை இந்தியா வலியுறுத்தி வருகின்றது என்று உயர்ஸ்தானிகர் தெரிவித்ததாகவும் கூட்டமைப்பு பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பு பேச்சாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறீதரன், சார்ஸ்ஸ் நிர்மலநாதன், கோவிந்தன் கருணாகரம், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கலையரசன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



