பிறந்து 13 நாட்களேயான பெண் குழந்தை உயிரிழப்பு
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் மட்டக்களப்பில் பிறந்து 13 நாட்களேயான பெண் குழந்தை பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று (22.01.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் அனோஜினி என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
சட்ட வைத்திய அறிக்கை
குழந்தையின் தாயாரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது அவர் சற்று
மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்த பொலிஸார் அவரை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன்
சடலத்தை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளனர்.
அதனையடுத்து இன்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய போது குழந்தைக்கு பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
