யாழ். வலயத்தில் பத்து வருடங்களுக்கு மேலாக இடமாற்றம் இல்லை!
யாழ் வலயத்தில் பத்து வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசாலையில் கடமை புரியும் 132 ஆசிரியர்களுக்கு இதுவரை இடமாற்றம் வழங்கப்படாமல் உள்ளமை தகவல் அறியும் சட்ட மூலத்தின் ஊடாக அம்பலமாகியுள்ளது.
வடக்கு மாகாண கல்வி அமைச்சில் பலவருடங்களாக, ஆசிரியர் இடமாற்றம் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை என பல தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இவ்வாறு பல குற்றச்சாட்டுகளின் மத்தியில், யாழ். வலயத்தில் மட்டும் பத்து வருடங்களை கடந்தும் இதுவரை வெளி மாவட்டங்களுக்கு செல்லாமல் 132 ஆசிரியர்கள் இருப்பது யாழ் வலயத்துக்கு வழங்கப்பட்ட தகவல் அறியும் சட்ட மூலத்தின் ஊடாக அம்பலமாகியுள்ளது.
சுமார் 7 வருடங்கள் கடந்தும் வெளி மாவட்டங்களில் கடமையாற்றும் ஆசிரியர்கள் யாழ்ப்பாணம் வர முடியாமைக்கு இங்கு பலர் வெளி மாவட்டங்களுக்கு செல்லாமை பிரதான காரணமாகும்.
அரசியல் ஆதிக்கத்தையும் மேலதிகாரிகளின் செல்வாக்கையும் பயன்படுத்தி பலர் வெளி மாவட்டங்களுக்குக் கடமையாற்றச் செல்லாமல் யாழ் மாவட்டத்துக்கு உள்ளே இடமாற்றம் பெறுகின்றமையும் அவதானிக்க முடிகிறது.
யாழ் வலயத்தில் 10 வருடங்களைத் தாண்டி ஒரே பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்களும் அதிகம் உள்ள பாடசாலைகளாக இடைக்காடு மகா வித்தியாலயம், யாழ் இந்து மகளிர் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் தலா ஏழு பேர் வரை கடமையாற்றுகின்றமை தெரியவந்துள்ளது.
யாழ். வலயத்தில் இடமாற்றம் வழங்காமல் பலர் இருக்கும் நிலையில் வெளி மாவட்டங்களில் கடமையாற்றும் ஆசிரியர்கள் பல வருடங்களாக வெளி மாவட்டத்திலேயே தமது காலத்தை கழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள்
அதிகமாக இருக்கும் நிலையில் வடமாகாண ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என
பலரும் எதிர்பார்க்கின்றனர்.





இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri
