வவுனியாவில் விபத்தில் சிக்கி 13 வயது சிறுமி பலி
ஏ9 வீதி பூனாவ பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளதாக பூனாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏ9 வீதி பூனாவ பகுதியில் பயணித்த காரொன்று வீதியின் குறுக்காக சென்ற நாய் ஒன்றுடன் விபத்துக்குள்ளாக முற்பட்ட நிலையில், சாரதி விபத்தை கட்டுப்படுத்தும் விதமாக வாகனத்தை செலுத்திய போது வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது கட்டுப்பாட்டையிழந்து மோதி விபத்துக்குள்ளானது.
பொலிஸார் விசாரணை
குறித்த விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், அவரது தாயார் மற்றும் கார் சாரதி ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தில் மரணமடைந்த சிறுமியின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், படுகாயமடைந்தவர்கள் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து குறித்து பூனாவ பொலிஸார் விசாரணைகளை
முன்னெத்துள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

சிறுவயதில் முத்துவிற்கு என்ன ஆனது, மனோஜ் என்ன செய்தார்... சிறகடிக்க ஆசை சீரியல் ஷாக்கிங் புரொமோ... Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
