யாழில் 13 வயதான சிறுமி துஷ்பிரயோகம்! - இளம் தம்பதியினர் கைது
யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் 13 வயதான சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவம் தொடர்பில் இளம் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுமி சுகயீனமுற்ற நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சிறுமியின் உறவினர் ஒருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
29 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பில் யாழ். மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினாலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் குறித்த இளைஞரின் 25 வயதான மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட யுவதியிடமிருந்து சிறுமியின் தகாத முறையில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam