13 வயது சிறுவனுக்கு தந்தையால் ஏற்பட்ட கொடூரம்: பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
பதின்மூன்று வயது சிறுவனைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் அவரது தந்தையை அஹுங்கல்ல பிரதேச பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (09.05.2023) முன்னெடுக்கப்பட்டதாக அஹுங்கல்ல பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ தினமான நேற்று முன்தினம் (08.05.2023) இரவு மது போதையில் வீட்டுக்கு சென்ற குறித்த நபர், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுவனைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகிறது.
சந்தேக நபரான தந்தை கைது
சந்தேக நபர் உறங்கச் சென்றதும், வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுவன், வெளிநாட்டில் பணிபுரியும் தனது தாயாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு சம்பவத்தை விபரித்துள்ளார்.
உடனடியாக செயற்பட்ட சிறுவனின் தாய், தனது சகோதரியிடம் விபரங்களைக் கூறி, அவருடன் சிறுவனை அழைத்துச் செல்லுமாறு கூறியதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவருகிறது.
அத்துடன், நேற்றைய தினம் அஹுங்கல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் சந்தேக நபரான தந்தை கைது செய்யப்பட்டதுடன், சிறுவனைச் சட்ட வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



