13 ஆயிரம் தாதிமார்கள் தமது பதவி உயர்வினை இழக்கும் அபாயம் (Photos)
அகில இலங்கை ரீதியாக 13 ஆயிரம் தாதிமார் உத்தியோகத்தர்கள் தமது பதவி உயர்வினை இழக்கின்ற நிலை தற்போது எற்பட்டுள்ளமையால் எமது சங்கப்பிரதிநிதிகளுடான அகில இலங்கை ரீதியாக போராட்டம் இடம்பெறுகின்றது என அரச தாதியோர் உத்தியோகச் சங்கத்தலைவர் சமன் இரத்தினபுரி (Saman Ratnapura) தெரிவித்துள்ளார்.
வடமாகாண சுகாதார தொழில் வல்லுனர்கள் சம்மேளனம் மற்றும் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் மற்றும் இலங்கை தாதியோர் சங்கத்தின் கம்பனி யூனியன் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த எற்பாட்டில், சுகாதார அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட ரணக்கே என்ற அரச திட்டத்தினை அமுலாக்கப்பட வேண்டும் என வலியூருத்தி 19 அம்ச கோரிக்கையினை உள்ளடக்கிய கவனயீர்ப்பு போராட்ட பேரணி இன்று யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
எமது கோரிக்கையினை நிறைவேற்ற வேண்டும் என்று சுகாதார அமைச்சருக்கு நாம் தெளிவாக கூறுகின்றோம். இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் கூட எந்தொரு நடவடிக்கையினையும், அமைச்சர் ஹெகலிய ரம்புக்கல, சுகாதார அமைச்சரின் செயலாளர் கூட எமது போராட்டத்தின் கோரிக்கைக்கு செவி சாய்காமல் உள்ளனர்.
சுகாதார அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட ரணக்கே சம்பள ஆணைக்குழுவில் 2010 ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும், மேலதிக நேரக்கொடுப்பனவினை அதிகரிக்கவேண்டும், விசேட கொடுப்பனவினை அதிகரிக்கவேண்டும், பதவி நிலை சுற்றுநிருபம் பொது நிர்வாக அலுவல்கள் அமைச்சினால் வழங்கப்பட்டபோதிலும் அதன் காரணமாக சுகாதார அமைச்சு அதற்காக சுற்று நிருபத்தினை வெளியிடவில்லை, சுகாதார அமைச்சர் இராணுவத்திற்கு அல்ல அவர் பொதுமக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும்.
இதனால் எமது கோரிக்கைகளுக்கான நிவாரணங்களை பெற்றுத்தரும் வரை எமது போராட்டம் அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.







viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
