“ஒரே நேரத்தில் 13 பேரை பலியெடுத்த கிணறு” குஸிநகரில் கோரச் சம்பவம்! (photos)
வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் திருமண விழாவின் போது கிணற்றில் வீழ்ந்து குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரும் அடங்கியுள்ளனர்.
கிணற்றை மூடியிருந்த உலோகப் பலகையின்போது அமர்ந்திருந்தபோது, அது உடைந்து கிணற்றுக்குள் வீழ்ந்தபோதே இவர்கள் மரணமாகினர். குஸிநகர் மாவட்டத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின்போது மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த சம்பவம் "இதயத்தை உலுக்கும்" நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ளனர்.
பலகை உடைந்து வீழ்ந்ததும்;, ஏனைய விருந்தினர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
எனினும் 11 பேர் உடனடியாக இறந்துவிட்டனர். மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்



