13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்:மகிந்த
அரசமைப்பில் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
13ஆவது திருத்தச் சட்டத்தில் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத காணி மற்றும்
பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்
இரா.சம்பந்தனுக்கு உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்கள் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுதி
அவர் மேலும் தெரிவிக்கையில்,“அரசமைப்பின் 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண வேண்டும். இந்த நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுதியாகவுள்ளது.
எனவே, 13ஆவது திருத்தத்தில் உள்ள
அதிகாரங்கள் தொடர்பில் தனித்தனியே முன்னெடுக்கப்படும் பணிகள் தொடர்பில்
கேள்விகளைக் கேட்டுக் குழப்ப வேண்டாம்" என கூறியுள்ளார்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
