அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 13 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது
இலங்கை (Sri Lanka) கடற்பரப்பில் அத்துமீறிய கடற்றொழிலில் ஈடுபட்ட 13 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த கைது நடவடிக்கை இன்று (11.07.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
யாழ்ப்பாணம் (Jaffna) காரைநகர் கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூன்று படகையும் அதிலிருந்த 13 இந்திய கடற்றொழிலாளர்களையுமே எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டதாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைதான கடற்றொழிலாளர்களை மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று, யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இவர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam